• ஐஜேகே தலைவர் இளையவேந்தர் அவர்களின் “பிறந்த நாள் விழா”

  இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்  அய்யா டாக்டர் பாரிவேந்தர் M.P.அவர்களின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் தலைவர் உயர்திரு. இளையவேந்தர் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (15.07.2021) சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எளிய முறையில் கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைவர் இளையவேந்தர் அவர்கள் கட்சி கொடி ஏற்றி,  கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

  நிகழ்ச்சியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் இணை பொதுச்செயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்ட்டின், துணை பொதுச்செயலாளர்  எம்.ரவிபாபு, முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், விளம்பரப்பிரிவு செயலாளர் S.முத்தமிழ்செல்வன், செய்தித் தொடர்பாளர் D.பிரவீன் காந்தி வழக்கறிஞரணி செயலாளர் K.R.பாலாஜி, அமைப்புச் செயலாளர் N.காமராஜ், தொழிற்சங்க செயலாளர் S. சேவியர், இளைஞரணி துணைச் செயாளர்கள் V.கேசவன் மற்றும் D.கணேசன்   உள்ளிட்ட மாநிலப் பொறுப்பாளர்களும், இளைஞரணி – மகளிரணி – மாணவரணி பொறுப்பாளர்களுடன், தமிழகம் முழுவதுமுள்ள கட்சிப்பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

  மேலும், இளையவேந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கட்சிக் கொடி ஏற்றியும், அன்னதானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் கட்சி பொறுப்பாளர்களால் நடைபெற்றது.

  இங்ஙனம்

  கட்சித் தலைமையகம்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)