• இந்திய ராணுவ வீரர் திரு.தேவ் ஆனந்த் அவர்களின் மறைவிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் - டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

    பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லால்குடி சட்டமன்றத் தொகுதியின் தின்னியம் – மனக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த திரு.அந்தோனிராஜ் அவர்களின் மகன் ராணுவ வீரர் திரு.தேவ் ஆனந்த் அவர்கள் சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.

    இளம் வயதில் இந்திய ராணுவத்தில் தாய்நாட்டிற்காக பணிபுரிந்து உயிர்நீத்த திரு.தேவ் ஆனந்த் அவர்களின் இழப்பு மிகுந்த வருத்தத்தினை அளிக்கின்றது. அவரின் குடும்பத்தினருக்கு என் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி