• திமுக கொள்கைபரப்புச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு.ஆ.ராசா அவர்களுடைய மனைவியின் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P., அவர்கள் இரங்கல்

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் – நீலகிரி பாராளுமன்றத் தொகுதி உறுப்பினரும் – முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.ஆ.ராசா அவர்களுடைய மனைவியின் மறைவுச் செய்தி கேட்டு  சொல்லொனா துக்கத்தில் ஆழ்ந்தோம்.  திருமதி பரமேஸ்வரி அவர்களின் இளம் வயது மறைவு என்பது,  அவர்களுடைய  குடும்பத்திற்கு மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத  இழப்பாகும். அவரை இழந்து வாடும்   மரியாதைக்குரிய ராசா அவர்களுக்கும் – அவரது குடும்பத்தாருக்கும் – உற்றார் உறவினர்களுக்கும் என் சார்பிலும், நான் சார்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும்  என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, திருமதி பரமேஸ்வரி ராசா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

     

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.