• நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்களுடைய மனைவி திருமதி பரமேஸ்வரி அவர்களின் மறைவிற்கு - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் – நீலகிரி பாராளுமன்றத் தொகுதி உறுப்பினரும் – முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.ஆ.ராசா அவர்களுடைய மனைவி திருமதி பரமேஸ்வரி அவர்கள்  உடல்நலக்குறைவால் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றோம்.  திரு. ராசா அவர்களின் அரசியல் வாழ்விற்கு பக்கபலமாக இருந்தவர் திருமதி பரமேஸ்வரி அம்மையார் அவர்கள். அவரை இழந்து வாடும்   மரியாதைக்குரிய சகோதரர் திரு.ஆ.ராசா அவர்களுக்கும் – அவரது குடும்பத்தாருக்கும்  மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

   

  வருத்தங்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)