• நபிகள் நாயகம் அவர்களின் நன்னெறிகளை அனைவரும் கடைபிடித்தால் ஒற்றுமை தழைத்தோங்கும் - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் ரம்ஜான் வாழ்த்து

  உண்மையான வாழ்வு, சகிப்புத்தன்மை, ஈகை உள்ளிட்டவற்றை குரான் வலியுறுத்துகின்றது. கொரோனா நெருக்கடியிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பைக் கடைபிடித்தனர் இஸ்லாமிய சமுதாயத்தினர். கொரோனா என்ற கொடிய அரக்கனால் இன்று உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. உலகைச் சூழ்ந்துள்ள இந்தக் கொரோனா எனும் இருளை விரட்டி ஒளிபெறச் செய்வோம் என இப்பெருநாளில் சூளுரைப்போம்.

  அண்ணல் நபிகள் நாயகம் உலக மக்களுக்கு போதித்த அன்பு   மனிதநேயம்   அமைதி   சமாதானம்   சமத்துவம் – நல்லொழுக்கம்   பிறருக்கு உதவும் மாண்பு ஆகிய உயரிய நெறிமுறைகளை அனைவரின் உள்ளத்திலும் ஏற்று   அதனை முழுமையாக கடைபிடிப்போம். அவ்வழியை பின்பற்றி வாழ்ந்தால் நாட்டில் ஒற்றுமை தழைத்தோங்கும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)