• ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ வள்ளுவரின் குறளுக்கேற்ப உழைப்பால் வெற்றி ஈட்டியவர் - திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும்பான்மை வெற்றிக்கு - ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் வாழ்த்து

  தனது சக்திக்கு மீறி உழைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள். அவர் ஆட்சியில் இல்லாதபோதும், மழை வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் அவர் அயராது மக்களுக்காக உழைத்ததை இந்த நாடறியும்,

  ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்புக்கு வாக்களித்து, மக்கள் அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர். நிதிப் பற்றாக்குறை, கொரோனா பேரிடர் போன்ற கடுமையான சூழலில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்ப்பதாகவும்,

  ‘களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில், அதனால் கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்’ என உதயசூரியன் குறித்து, பாவேந்தர் பாரதிதாசன் கூறியதுபோல், தமிழகத்தில் கல்வி – வேலைவாய்ப்பு - தொழிற்சாலைகள் போன்றவற்றை பெருகச் செய்து, சிங்காரச் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவதோடு நில்லாமல், ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சிங்கப்பூருக்கு நிகராக உயர்த்த வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)