• ‘உழைப்பாளிகள் தான் உலகின் உயிர்நாடி’ - டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்களின் ‘மே தின’ வாழ்த்துச் செய்தி

  ‘உழைப்பாளிகள் தான் உலகின் உயிர்நாடி’. உழைப்பவன் நிறுத்திவிட்டால் உலகப் பொருளாதாரம் முடங்கிவிடும். எந்தத் துறையைச் சேர்ந்த உழைப்பாளியானாலும் அவர்கள் தேசத்தின் உயிர் நாடிகள். அத்தகைய பெருமக்கள் போற்றப்பட வேண்டும்; மதிக்கப்பட வேண்டும். இதற்காகத்தான் அவர்களை வணங்கவும்  - போற்றவும் ‘உழைப்பாளர்கள் தினம்’ கொண்டாடப்படுகின்றது.

  இந்த நன்நாளில் உழைப்பாளிகள் வறுமையற்ற – உழைப்பிற்கேற்ற வருமானத்தைப் பெறக்கூடியவர்களாகவும் இருந்து, மக்களுக்கு தங்களுடைய தொண்டினை ஆற்றிட  அவர்களுக்கு அரசும் - மக்களும் உதவிட வேண்டும்.

  இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும் – என் சார்பாகவும், உழைப்பாளர்கள் அனைவரும் உடல் நடத்துடனும் – மகிழ்ச்சியாகவும் இருக்க இந்த உழைப்பாளர்கள் தினத்தில் வாழ்த்துகின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P,

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.