• “அறத்தையும், அஹிம்சையையும் இரு கண்களாக பாவித்தவர் பகவான் மகாவீரர்” ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும்- மகாவீர்ஜெயந்தி வாழ்த்து

  சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதே ‘மகாவீர் ஜெயந்தி’யாகும்.

  கொல்லாமையும் பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை விளக்கி, அஹிம்சை நெறியை உலகிற்கு உணர்த்திய பகவான் மகாவீரர் அவர்களின் போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும்.

  அறத்தையும், அஹிம்சையையும் இரு கண்களாகப் பாவித்த பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அவருடைய போதனைகளைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவி பச்சமுத்து

  தலைவர்

  இந்திய சுனநாயகக் கட்சி (IJK)