• ‘பத்ம ஸ்ரீ’ டாக்டர் விவேக் அவர்களின் மறைவிற்கு - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

  தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை கலைஞர்களில், தன்னுடைய ரசிகர்களுக்கு நகைச்சுவையை மட்டுமன்றி சமூக சிந்தனையையும் சேர்ந்தே கொடுத்தவர் ‘பத்ம ஸ்ரீ’ டாக்டர் விவேக் அவர்கள்.

  சிறந்த நடிகர் – சமூக சேவகர் – எழுத்தாளர்  என பன்முகங்கள் கொண்ட நடிகர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு மட்டுமல்லாமல் நம் எல்லோருக்கும் மிகப்பெரும் இழப்பாகும்.

  நடிகர் விவேக் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், தமிழ்த்திரையுலக ரசிகர்களுக்கும் – அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வருத்தங்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)