• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் - தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

  தமிழ் மொழியைப் பற்றியும் - தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் நமது பாரதப்பிரதமர் அவர்கள் சிறப்பாக உலகெங்கிலும் உரையாற்றி வருகின்றார். அத்தகைய தொண்மை வாய்ந்த தமிழ் மக்களுடைய புத்தாண்டு, தமிழ் நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நன்நாளில் தமிழ்நாட்டு மக்கள் மேலும் வளர்ச்சி பெற்று, தமிழ்நாட்டை மேன்மேலும் உயர்த்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் - பெருமை வாய்ந்த வரிகளுக்கு இணங்க, தமிழ் மக்கள் மற்ற இனத்தவரோடும் – மதத்தவரோடும், பிறமொழி பேசும் மக்களோடும் இணைந்து வாழ்ந்து, இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

  உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P,

  பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதி