• ‘தினமலர்’ நாளிதழின் கௌரவ ஆசிரியர் திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்மறைவிற்கு- டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் இரங்கல்

    கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தினமலர் செய்தித்தாளின் ஆசிரியராகவும் - ஆலோசகராகவும் இருந்து, திறம்பட செயல்பட்டவர் திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். தமிழகத்தின் தென்கோடியில் பிறந்து, தமிழ் மொழி பேசும் அனைத்து நாடுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். நாணயவியலில் இவர் கண்டு, வெளியிட்ட பல்வேறு ஆய்வுகள்,  இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின்  வரலாற்றை முறைப்படுத்த பெரும் உதவியாய் இருந்தது.

     நாணவியல் ஆராய்ச்சி, கணினித் தமிழ் சீர்திருத்தம் என பல துறைகளிலும் சிறந்து விளங்கிய அறிஞர் திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், தினமலர் வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P.,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.