• “வரும் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை - திருச்சியில் IJK மகளிரணி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது” - பொதுச்செயலாளர் திரு. பி.ஜெயசீலன் அவர்கள் அறிவிப்பு

  மிக விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு – வேட்பாளர்களைத் தேர்வு செய்தல் – தேர்தல் பணிக்கான  முன்னேற்பாடுகளை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க கட்சியின் மாநில – மாவட்ட – ஒன்றிய – நகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

   வரும் 21-ஆம் தேதி (21.02.2021) ஞாயிற்றுக்கிழமை திருச்சி காஜாமலையிலுள்ள SRM ஹோட்டல் அரங்கில் காலை 11.00 மணிக்கு, IJK மகளிரணி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டமும் – மாலை 3.00 மணிக்கு கட்சியின் மாநில – மாவட்ட – ஒன்றிய – நகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது.

   இந்த இரண்டு கூட்டங்களிலும் – அய்யா டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்களும், தலைவர் உயர்திரு. ரவிபச்சமுத்து அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். எனவே, அனைத்து பொறுப்பாளர்களும், மகளிரணி நிர்வாகிகளும் தவறாமல் இக்கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். 

   

  அன்புடன்,

  பி.ஜெயசீலன்

  பொதுச்செயலாளர்

  இந்திய ஜனநாயகக் கட்சி  (IJK)