• “இந்திய ஜனநாயகக்கட்சியின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 22-ஆம் தேதி முதல் விருப்பமனு கொடுக்கலாம்” - ஐஜேகே பொதுச்செயலாளர் திரு. பி.ஜெயசீலன் அவர்கள் அறிவிப்பு

  2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வரவேற்கப்படுகின்றது. இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்களின் விருப்ப மனுவினை வரும்  22-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், அடுத்த மாதம் (மார்ச்) 5-ஆம் தேதிக்குள், சென்னை அசோக்நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

   விருப்பமனு பெற விரும்புவோர் கட்சி தலைமை அலுவலகத்திலோ அல்லது ஐஜேகே இணையதளத்திலோ (www.ijkparty.org) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலுக்கான தேதி, இடம் போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

  நம் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும்  உறுப்பினர்கள் மட்டுமின்றி, அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் அரசியல் மீது பற்றும்,  நம்பிக்கையும் கொண்டவர்களும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்கின்றோம்.

   

  அன்புடன்,

  பி.ஜெயசீலன்

  பொதுச்செயலாளர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)