• யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணினை மீண்டும் அதே இடத்தில் நிறுவ இலங்கை அரசிற்கு அழுத்தம் தரவேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P, வலியுறுத்தல்

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட  

  முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணினை மீண்டும் அதே இடத்தில் நிறுவ  

  இலங்கை அரசிற்கு அழுத்தம் வேண்டும்

   

  -    மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P, வலியுறுத்தல் -

   

  இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டிருந்ததுநீதிமன்ற அனுமதியின்பேரில், 2019-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட இந்நினைவுத்தூண் - இலங்கை அரசின் உத்தரவின் பேரில்நேற்று இரவு அராஜகமான முறையில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.  இலங்கையில் தமிழ் இனம் எப்பொழுதுமே இரண்டாந்தர குடிமக்களாகவே கருதப்படுகின்றார்கள் என்பதற்கு இது சமீபத்திய சான்றாகும்.

   

  இலங்கைத் தமிழர்களின் அரசியல் மற்றும் குடியுரிமையினை நிலைநாட்டும் வண்ணம்முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணினை, மீண்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவுவதற்கு, இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P.

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி