-
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தி.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
----------------------------------------------
நாளை பிறக்கவுள்ள 2021-ஆம் ஆண்டு, பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது. முதலாவதாக கொரோனா பெருந்தொற்று முற்றிலும் இல்லாமலாகி, மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கை முறைமைகளைத் தொடரவேண்டும் என வேண்டுகிறோம்.
அடுத்து மிக முக்கியமாக, தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல். இந்த தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதுடன், மக்கள் மனதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். விலைமதிப்பில்லா வாக்குகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் மனநிலை மாறி, ஜனநாயகத்தின் மாண்புகள் காப்பாற்றப்பட, இப்புத்தாண்டில் உறுதி ஏற்போம் எனக்கூறி, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P,
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.