-
இரங்கல் செய்தி (திரு. எம்.எஸ்.மணி)
இரங்கல் செய்தி
இந்திய ஜனநாயகக் கட்சியின் துணை அமைப்புச்செயலாளரும், கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமாகிய திரு.எம்.எஸ்.மணி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருந்துகின்றேன்.
கட்சி தொடங்கிய காலத்திலிருந்து அதன் வளர்ச்சிக்கும், அமைப்பு ரீதியிலான செயல்பாட்டிற்கும் பெரும் பங்காற்றியவர் திரு.எம்.எஸ்.மணி அவர்கள். அவரை இழந்து துயறுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வருத்தங்களுடன்,
ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)