• திரு.ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களின் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி அவர்கள் இரங்கல்

    லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் - மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமாகிய திரு.ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களின் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பெரிதும் ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தவர் திரு.ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். அரசியல் மட்டுமன்றி சமூக நீதிக்காகவும் குரல் கொடுக்கின்ற தலைவராக விளங்கிய திரு.ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களின் மறைவால் வருத்தமுற்றிருக்கும் அவரின் கட்சியினருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.