• திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி அவர்களின் தாயார் மறைவிற்கு- டாக்டர் பாரிவேந்தர் எம் பி அவர்கள் இரங்கல்

    தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சரும் – தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் திருமதி ராஜாமணி  அம்மையார் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    விருதுநகர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமாகிய  மறைந்த திரு.தங்கபாண்டியன் அவர்களின் துணைவியார் திருமதி. ராஜாமணி அம்மையார் அவர்கள், தன் குடும்பத்தினரின் அரசியல் பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். அவரை இழந்து வாடும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம்தென்னரசு அவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.