• வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்கள் கலந்துகொள்கின்றார்”- பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அறிவிப்பு

    விவசாய விளைபொருட்கள் - வணிகம் மற்றும் வர்த்தக சட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள விவசாய பெருங்குடி மக்களை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பின்னடைவைத் தரக்கூடியதும்,  கூட்டாட்சித் தத்துவத்திற்கு புறம்பானதுமான இச்சட்டங்களை எதிர்த்து,  திமுக தலைமையிலான தோழமைக்கட்சியினர் வரும் 28-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி,  தென்சென்னை மாவட்ட திமுக சார்பில், பெருங்குடி – கந்தன்சாவடி சந்திப்பு அருகே நாளை(28.09.2020) திங்கட்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் உயர்திரு ‘இளையவேந்தர்’ திரு.ரவிபச்சமுத்து அவர்களும், நானும் (பி.ஜெயசீலன்) மற்றும் மாநில - மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்கின்றோம்.  எனவே, இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், சென்னை மாவட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.