• “மத்தியஅரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச்சட்டத்தை எதிர்த்து திமுக தோழமைக் கட்சிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐஜேகே நிர்வாகிகள் பங்கேற்று வெற்றி பெறச்செய்ய வேண்டும்”- IJK தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் அறிக்கை

    விவசாய விளைபொருட்கள் - வணிகம் மற்றும் வர்த்தக சட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள விவசாய பெருங்குடி மக்களை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பின்னடைவைத் தரக்கூடியதும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு புறம்பானதுமான இச்சட்டங்களை எதிர்த்து, திமுக தலைமையிலான தோழமைக்கட்சியினர் வரும் 28-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி,  பெரம்பலூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா அவர்களுடன், நானும் நம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்கின்றனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில், திமுக தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் நம் கட்சியின் மாநில,  மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டு நமது கோரிக்கைகள் வெற்றிபெற உறுதுணையாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.