• தென்னிந்திய திரையிசையின் அடையாளமாக விளங்கியவர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் - S.P.B மறைவிற்கு IJK தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற  திரைப்படப் பின்னணிப் பாடகராக விளங்கியவர் திரு. S.P.பாலசுப்ரமணியம் அவர்கள். 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, பலகோடி ரசிகர்களின் இதயத்தை வென்றவர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இவரின் குரல் ஒலிக்காத இடமேயில்லை.

    எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன் தொடங்கி, தற்போது விஜய், அஜித் உள்ளிட்ட மூன்று தலைமுறை முன்னணி கதாநாயகர்களுக்கும் பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர் திரு. S.P.பாலசுப்ரமணியம் அவர்கள். அவரின் மறைவு திரையிசைக்கு பெரும் இழப்பு என்பதோடு, தமிழ் திரையிசை உலகில் மிகப்பெரும் வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.