• “தினத்தந்தி” அதிபர் மறைந்த சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளிற்கு பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி

    தினத்தந்தி நிறுவனரும் தமிழக சட்டப்பேரவை முன்னாள்  தலைவருமான மறைந்த அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் மகனும், தமிழ்ப் பத்திரிகை உலகின் வழிகாட்டியாகவும் விளங்கிய மறைந்த திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் இன்று.

    செய்தித்துறையில் மட்டுமல்லாது, சமூகப் பணிகளிலும் மிகுந்த நாட்டமுடையவராக திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் திகழ்ந்தார். எண்ணற்ற திருக்கோவில்கள், கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு பெரும் நிதியினை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் மிகுந்திருந்த திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்கள், இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவர் – இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகித்து திறம்பட செயலாற்றியுள்ளார்.  இவரின் இலக்கிய மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி, 2008-ஆம் ஆண்டு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. அத்தகு சிறப்பு வாய்ந்த  திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பிறந்த இந்நன்நாளில், அவரின் சமூகப் பணியினையும், இலக்கியப் பணியினையும் நினைவு கூர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.