• இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

    மாணவப்பருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத காலக்கட்டமாகும். வளரிளம் பருவத்தில் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் அறிவுதான், அவர்களை சாதனையாளர்களாக உருமாற்றும். அன்னை, தந்தைக்கு அடுத்தும் - இறைவனுக்கு முன்பாகவும் குருவினை போற்றுவது நம் தமிழர்தம் மரபாகும். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினத்தில், குருவணக்கம் செலுத்துகின்ற வகையில் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.