• முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., அவர்கள் இரங்கல்

    இந்திய நாட்டின் மிகச்சிறந்த குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும், மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். தற்போது இருக்கும் அரசியல் ஆளுமைகளில் மிக மூத்த வரும் - அனுபவம் வாய்ந்த வரும் - இந்த நாட்டின் வளர்ச்சியின் மீது அளப்பரிய பற்று கொண்ட வருமாகிய பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு தேசத்திற்கு பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்