• நாடாளுமன்றஉறுப்பினர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

    காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரும், இளமைக்காலம் தொட்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொண்டராக பொதுப்பணி ஆற்றியவருமான திரு.வசந்தகுமார் அவர்கள்  உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருந்துகின்றேன்.

    நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இரண்டுமுறை சிறப்பாக பணியாற்றியவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, பெருவாரியான வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றவர். தமிழ்நாட்டில் முன்னணித்தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கியவர். இத்தகு சிறப்பு வாய்ந்த திரு. வசந்தகுமார் அவர்களை இழந்து வாடும் காங்கிரஸ் கட்சியின் அருமைத் தொண்டர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.