• “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விட்டுச் சென்ற பணியினை தொய்வின்றி நடத்தி வருபவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் வாழ்த்து

    திமுகவின் இளைஞரணி வட்டச் செயலாளராக தொடங்கிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம், இன்று திமுக என்கின்ற மாபெரும் கட்சியின் தலைவர் என தொடருகின்றது. சட்டமன்ற உறுப்பினராக, சென்னையின் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக என அரசுப் பொறுப்புகள் பல வகித்தாலும், “திமுக தலைவர்” என்பதில் பெருமிதம் கொள்ளும் தலைவராக விளங்குபவர் தளபதி அவர்கள்.

    தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், திமுக தலைவராக பொறுப்பேற்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியினை தேடித்தந்தார். தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் போற்றத்தகுந்த பங்கினை ஆற்றிவருகின்றார். அத்தகு தகுதிவாய்ந்த தளபதி அவர்கள், திமுக தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விட்டுச் சென்ற பணியினை தொய்வின்றி தொடர்ந்து நடத்தி வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இந்த மூன்றாம் ஆண்டிலும் வெற்றிமேல் வெற்றிகள் தொடரவேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றேன்.