• உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P., அவர்கள் இரங்கல்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த திரு.ஏ.ஆர்.லட்சுமணன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக பொறுப்பு வகித்த முதல் தமிழர் என்கிற பெருமையைப் பெற்றவர் ஆவார். சட்ட ஆணையத்தின் தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த திரு.ஏஆர்.லட்சுமணன் அவர்கள், சமூக நலன் கருதி பல்வேறு புரட்சிகரமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, ‘பொது இடங்களில் புகைபிடித்தல் சட்டவிரோதமானது’ என்கிற தீர்ப்பினை வழங்கியவர் திரு.ஏ.ஆர்.லட்சுமணன் அவர்கள்.

    நேற்று அவரின் துணைவியார் திருமதி மீனாட்சி ஆச்சி அவர்கள் மரணமடைந்த மறுநாளே, திரு.ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களும் மறைந்திருப்பது, அக்குடும்பத்திற்கு மிகப்பெரிய சோகத்தினை ஏற்படுத்தியிருக்கும். அவரின் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கு கொண்டு, திரு.ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.