• இந்திய ஜனநாயகக்கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து.

    மூல முதற்பொருள், ஞானகாரகன் என போற்றித் துதிக்கப்படும் விநாயகப் பெருமானின் பிறப்பினை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. எண்ணிய எண்ணியாங்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற விநாயகரை வணங்கித் தொடங்குவது  நம் நாட்டில் தொன்றுதொட்டு வழக்கத்திலுள்ள வழிபாட்டு முறையாகும்.

    வீதிகள் தோறும் விழாக்கோலம் கொண்டு அனைத்துத்தரப்பு மக்களாலும் ஆராதித்து கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருநாளில்,  அனைவருக்கும் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன்,  விநாயகப்பெருமானின் அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டுமென வேண்டுகின்றேன்.