• “மாநில எல்லைகளால் பிரிந்திருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்களே என்கிற எண்ணத்துடன் ஒன்றுபட்டிருப்போம்” - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, சுதந்திர தின வாழ்த்து

    சுதந்திரம் என்கிற வார்த்தைக்கும், அதில் பொதிந்திருக்கும் உணர்வுக்கும் நேரடி அனுபவம் இல்லாத தலைமுறையில் நாம் இருக்கின்றோம். அண்ணல் காந்தியடிகளின் சத்திய வேட்கையால் ஈர்க்கப்பட்ட பல கோடி மக்களின் உரிமைகீதம், இன்று சம்பிரதாயமான நடவடிக்கையாக இருந்துவிடக்கூடாது என்கிற பேராவலில் இன்றும் பல தலைவர்கள் நாட்டின் இறையாண்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும்  பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    அரசியலால் – கொள்கைகளால் – மொழியால் – மதத்தால் – இனத்தால் - மாநில எல்லைகளால்  பிரிந்திருந்தாலும்,  ‘நாம் அனைவரும் இந்தியத் திருநாட்டின் மடியில் தவழும் பிள்ளைகளே’ என்கிற உயரிய எண்ணத்துடன் ஒன்றுபட்டிருப்போம் எனக்கூறி, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.