• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

    இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இனிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட மக்களாட்சி நடைபெறும் நாடாக இந்தியா விளங்குகின்றது.

    நம் நாடு சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டுக்கு  நெருக்கமாக பல நாடுகள் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. அந்நாடுகள் பலவற்றில் தொடர்ந்து மக்களாட்சி நடைபெற்றதில்லை. ராணுவ ஆட்சி - சர்வாதிகார ஆட்சி என ஜனநாயகத்தை தவறவிட்டபோதிலும், இந்தியா மட்டுமே ஜனநாயகத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கின்றது.

    இத்தகு மேன்மையை நம் இந்தியத் திருநாடு பெறுவதற்காக, தங்களின் இன்னுயிரை ஈந்து - நமக்காக பாடுபட்ட பல்லாயிரம் தியாகிகளை நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.