-
அனைவரின் இல்லங்களிலும் இன்னல்கள் விலகி இன்பங்கள் சூழ வேண்டும்”- கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் வாழ்த்து
கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியைக் கணக்கிட்டு, கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், பக்தர்களின் வீட்டிற்கு குழந்தை வடிவில் கண்ணன் வருவார் என்பது நம்பிக்கையாகும். அதனால் வீட்டினை அலங்கரித்து, வாசலில் இருந்து பூஜை அறை வரையில், குழந்தை வடிவில் கண்ணன் நடந்து வருவதுபோல் அவரது பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்பது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். இறைவனை தந்தையாக, தாயாக, குருவாக, குழந்தையாக எந்த வடிவத்திலும் வணங்கலாம் என்கிற தத்துவத்தின் வெளிப்பாடாக கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
கடந்த ஐந்து மாதங்களாக மக்கள் மன அழுத்தத்திலும், பொருளாதார நலிவிலும் இன்னலுற்று வருகின்றார்கள். இந்தக் கடினமான சூழ்நிலை விலகி, அனைவரின் இல்லங்களிலும் இன்பங்கள் சூழவேண்டுமென இறைவனை வேண்டி, கிருஷ்ணஜெயந்தி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.