• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

    “நம்மால் இயன்றதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதல்” என்கிற இறைக்கோட்பாட்டின் அடிப்படையில், உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களால் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனைப் போற்றும் வகையில், அனைத்து சமுதாய மக்களும் அவர்களுக்கு அன்பினைப் பரிமாறி, நேயத்தினை வெளிப்படுத்த வேண்டும். இந்த ஈகைத்திருநாளில் நம் இதயங்களில் சாந்தியும் – சமாதானமும் நிலவட்டும் எனக்கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.