• திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. குழந்தை தமிழரசன் அவர்களின் மறைவிற்கு - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் 1996 முதல் 2001–ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, சிறப்பான முறையில் தொகுதி மக்களுக்கு பணியாற்றி வந்த திரு.குழந்தை தமிழசரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.

    எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்று விருத்தாசலம் , உளுந்தூர்பேட்டை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். திமுக-வின் தீர்மானக்குழு செயலாளராகவும் பணியாற்றிய திரு.குழந்தை தமிழரசன் அவர்கள், அக்கட்சி  நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடத்திலும், திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

    அவரின் மறைவு தனிப்பட்ட முறையில், கடலூர் மாவட்ட பார்க்கவகுல மக்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.