• விருத்தாசலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.குழந்தை தமிழரசன் அவர்களின் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P., அவர்கள் இரங்கல்

    விருத்தாசலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக-வின் தீர்மானக்குழு செயலாளருமான  அன்புச்சகோதரர் திரு.குழந்தை தமிழரசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    என்மீதும், பார்க்கவகுல சமுதாய உறவுகள் மீதும் திரு.குழந்தை தமிழரசன் அவர்கள் மிகுந்த ஈடுபாடும், பற்றும் கொண்டவராக விளங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாவட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர், மிகுந்த அரசியல் நாகரீகமும், தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிமையானவராகவும் விளங்கினார். அத்தகு சிறப்புவாய்ந்த திரு. குழந்தை தமிழரசன் அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் – உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.