-
டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., அவர்களின் கோரிக்கையினை ஏற்று சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் நன்றி அறிக்கை
திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூரில் 1988-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில் பிறந்தவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். அதன்பின், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் பதிவு செய்து கொண்டார். 1916-ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்து செயல்படத் தொடங்கினார். 1930 – 1939 வரை, சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகவும், நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இங்கிலாந்து அரசின் அழைப்பினை ஏற்று லண்டன் மாநகருக்கு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சென்ற
சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள், 1940-ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி, ஓமனில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். தான் வாழ்ந்த காலம் வரையிலும் தமிழர்களின் அரசியல் உரிமைக்காகவும் – சமூக விடுதலைக்காகவும் பாடுபட்டவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள்.
அவருக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், திருச்சி அபிசேகபுரத்தில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்காக காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.