• திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து, தொகுதி மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் திறம்பட எடுத்துரைத்து அவற்றைத் தீர்ப்பதற்காக பாடுபட்டவர் மறைந்த திரு.ஜெ.அன்பழகன் அவர்கள்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நேரில் சென்று நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கிவந்தார். அதனால் ஏற்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அவலம் நம்முடைய இதயத்தை கனக்கவைக்கின்றது.

    சென்னை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் பங்கு அளப்பறிய ஒன்றாக இருந்துள்ளது. சிறந்த களப்பணியாளராகவும் – திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மீது மாறா பற்று கொண்டவராகவும் விளங்கிய திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவால் பெரிதும் வருத்தமுற்றிருக்கும் திமு.கழக தோழர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.