• நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் “ரமலான் நோன்புத் திருநாள்” வாழ்த்துச்செய்தி

    புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், மனிதநேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு பொருள் உதவி செய்யவேண்டும் எனவும் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்.  இதுபோல்,  இவ்வுலகிற்கு அவர் உணர்த்திய அனைத்து நன்னெறிகளையும் - மத பேதமின்றி அனைவரும் கடைபிடித்தால் உலகில் ஒற்றுமை தழைத்தோங்கி நாடு வளம் பெறும்.

    ரமலான் திருநாளான இந் நன்நாளில், இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் மனித குலத்திற்கு வழங்கிய இதுபோன்ற நற்கருத்துக்களை நினைவில் கொள்வோம் எனக்கூறி, அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் உளம்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.