-
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள்- ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து வாழ்த்து
தமிழகத்தின் மத்திய பகுதியான தஞ்சை – திருச்சி – புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களை ஆட்சி செய்து பெரும்புகழுடன் விளங்கியவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள். கி.பி. 675-ஆம் ஆண்டு பிறந்து, தன்னுடைய 30-வது வயதில் மன்னராக முடிசூட்டிக்கொண்டு, கி.பி. 745–ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள், தான் பிறந்த முத்தரையர் சமூகத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் போட்டியிட்டு, நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வெற்றியில் முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த பல லட்சம் வாக்காளர்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
தமிழகத்தின் புகழ் வாய்ந்த மன்னர்கள் வரிசையில், இன்றும் தனிச்சிறப்புடன் விளங்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழ் எக்காலத்திலும் நிலைத்திருக்க வேண்டும் எனக்கூறி, அவரின் இப்பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குகின்றேன்.