• மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு ஹர்ஷவர்தன் அவர்களுக்கு- டாக்டர் பாரிவேந்தர் M.P., வாழ்த்து

    ஜெனிவாவிலுள்ள உலக சுகாதார அமைப்பில் 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வமைப்பின்  73-வது கூட்டத்தொடரில்,  உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்கள், உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவர் இன்று (22.05.2020) அப்பொறுப்பினை ஏற்கவுள்ளார்.

    உலக நாடுகளை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ள கொரோனா என்னும்  கொடிய தொற்றுநோயினை, இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பணியில்  டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கும் பங்குண்டு.

    சரியான நேரத்தில் இப்பொறுப்பினை அவருக்கு வழங்கிய உலக சுகாதார அமைப்பிற்கும், அப்பொறுப்பினை ஏற்கவுள்ள மத்திய அமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.