• IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - ‘மே தின’ வாழ்த்துச் செய்தி

    எட்டு மணி நேர வேலை என்பது தொழிலாளர்களுக்கு இன்று உரிமையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த உரிமையினைப் பெற எத்தனை போராட்டங்கள் – எத்தனை பேரின் உயிர்த்தியாகங்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய அர்ப்பணிப்புகள் மூலம் பெற்ற தொழிலாளர்களின் உரிமையை கவனப்படுத்தவும் – அவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தவும் ‘மே தினம்’ கொண்டாடப்பட்டு வருகின்றது.

     வழக்கமாக, தொழிலாளர் தோழர்கள் இந்த நாளில் ஊர்வலங்கள் செல்வதும்,  விளக்கக் கூட்டங்கள் நடத்துவதும், தாங்கள் பணியாற்றும் தொழிற்சாலை வளாகத்தில் ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியினை பரிமாறிக்கொள்வதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வுகளாகும்.

    ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் அனைத்து தொழிற்கூடங்களும் முடங்கியுள்ள நிலையில் அத்தகைய கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பில்லை. எனினும், தொலைபேசி – மின்னஞ்சல் - குறுஞ்செய்தி போன்ற நவீன வசதிகள் மூலம் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு இந்நாளை அதே உற்சாகத்துடன் கொண்டாடுவோம் எனக்கூறி தொழிலாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக இந்திய ஜனநாயகக் கட்சியின் தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த தோழர்களுக்கும் மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.