• பெரம்பலூர்நாடாளுமன்ற உறுப்பினர்டாக்டர்பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் ‘மேதின’ வாழ்த்துச் செய்தி

    ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் தேதியை ‘தொழிலாளர் தின’மாக கொண்டாடி வருகின்றோம். ஆனால் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் மே தினத்தை கொண்டாட முடியாத மன நிலையில் தொழிலாளர் தோழர்கள் உள்ளனர்.

    உலகின் மிகக்கொடிய தொற்று நோயாக பரவிவரும் கொரேனா வைரஸ் தாக்கத்தால், உலகின் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் முதல் விவசாயப் பணிகள் வரை அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் பல கோடி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தும், தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் பெரும் நெருக்கடியில் உள்ளனர். இச்சூழ்நிலையில் அவர்களுக்கு எவ்வாறு வாழ்த்து சொல்வது எனத் தெரியவில்லை.

    எனினும், நம்பிக்கை ஒன்றையே  மூலதனமாக்கி, உழைப்பால் தங்களை உயர்த்திக்கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு, தற்போதைய பாதிப்புகள் தற்காலிகமானதுதான் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் ‘மே தின’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.