• கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தனிமைப் படுத்திக் கொள்வது மட்டுமே தீர்வு – அலட்சியம் வேண்டாம். பொதுமக்களுக்கு IJK தலைவர் ரவி பச்சமுத்து வேண்டுகோள் .

    கொரோனா என்னும் கொடிய வைரஸ் கிருமியின்  தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் சமூக விலகல் ஒன்றே தீர்வு என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதனையேற்று, பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், மூன்று வார கால ஊரடங்கை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ம் தேதி வரை நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்ளவேண்டும். இதை ஏற்று கடைபிடிப்பதில் அலட்சியம் வேண்டாம். 

    காட்டுத்தீயைப்போல் ஒரே நாளில் பல லட்சம் பேருக்கு பரவி, அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆற்றல் பெற்றது இந்த கொரோனா வைரஸ்.

    இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமும் – அடர்த்தியும் கொண்ட நாட்டில், ஒரே ஒரு நாள் இந்த வைரஸ் பரவிவிட்டால் பல லட்சம் உயிர்களை அழித்தொழிக்காமல் விடாது. எனவே பொதுமக்கள் இதன் தீவிரம் உணர்ந்து, எச்சரிக்கையுடனும் – கண்டிப்புடனும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.