• 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை - சென்னை அருகே மறைமலைநகரில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், IJK தலைவர் ரவிபச்சமுத்து அறிவிப்பு

    15.03.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு, காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அருகே, மறைமலைநகரில் உள்ள ஆழ்வார்  திருமண மண்டபத்தில், இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்,  என் தலைமையில் நடைபெற உள்ளது.

    இப்பொதுக்குழுவில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

    தற்போதைய அரசியல் சூழ்நிலை – மிக விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத்  தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் உறுப்பினர்கள் சேர்த்தல் – கிளைகள் அமைத்தல் ஆகிய பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதால், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.