• ”அனைத்து துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தும் பெண்ணினத்தை போற்றுவோம்” - டாக்டர் பாரிவேந்தர் M.P., மகளிர் தின வாழ்த்து –

    மனித இனத்தில் ஆணுக்கு சரி பாதியாய் எண்ணிக்கையிலும் – எண்ணங்களிலும் இருப்பவர்கள் பெண்கள். அவர்களின் ஆற்றல் இன்று அனைத்து துறைகளிலும் கோலோச்சுகின்றது. ஆட்சி அதிகாரத்திலிருந்து - அறிவியல் மேலாண்மை வரை அவர்களின் சாதனைப் பட்டியல் நீள்கின்றது.

    வீட்டிற்கும் – நாட்டிற்குமாய் அவர்கள் ஆற்றும் கடமைக்கு நன்றி பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 08 ம் தேதியை ‘உலக மகளிர் தின’மாக கொண்டாடி வருகின்றோம். என்றும்  நமக்கு அரணாக விளங்கும் பெண்ணினத்தின் பெருமையை போற்றும் வகையில், மகளிர் தினம் கொண்டாடும் இந்நன்னாளில், எனது இதயமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.