• பொதுத்தேர்வு எழுதவுள்ள 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P., வாழ்த்து

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (02.03.2020) 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 04.3.2020 அன்று 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குமான தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில், 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணவர்கள் 12-ஆம் வகுப்பிலும், 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 மாணவர்கள் 11-ஆம் வகுப்பிலும் தேர்வெழுத உள்ளனர்.

    இப்பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்வாகவும், அவர்கள் பட்டப்படிப்பில் எந்தத் துறையில் சேர்ந்து கல்வி பயில்வது என்பதனை தேர்ந்தெடுக்கும் தேர்வாகவும் அமைய உள்ளது. அவ்வகையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்வினை எழுதவுள்ள 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவக் கண்மணிகள் அனைவரும் வெற்றிபெற்று வாழ்வில் உயர்நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.