• ‘தினத்தந்தி’ அதிபர் - மறைந்த திரு.சிவந்திஆதித்தனார் அவர்களின் மணிமண்டப திறப்புவிழாவிற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P., வாழ்த்து

    தமிழ் பத்திரிக்கை உலகின் முன்னோடியாக விளங்கிய, ‘தினத்தந்தி’ அதிபர் மறைந்த  திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் புகழிற்கு நிலைத்த பெருமையை அளிக்கும் வகையில், திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டிணத்தில்,  தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று (22.02.2020) நடைபெற்றுள்ளது.

    திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் பதினைந்திற்கும் மேற்பட்ட உள்ளூர் பதிப்புகளாக ‘தினத்தந்தி’ நாளிதழைக் கொண்டுவந்து, தமிழகத்தின் முதன்மை செய்தித்தாளாக  நிலைநிறுத்தினார். தமிழ் இன உணர்வும், மொழிப்பற்றும், சாமானிய மக்களின் மீது மாறாத அன்பும் கொண்டவராக விளங்கிய, திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் விட்டுச்சென்ற ஊடகப்பணி மேன்மேலும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றேன்.