• அவிநாசி மற்றும் ஓமலூர் அருகே நிகழ்ந்த சாலைவிபத்துக்களில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P., இரங்கல்

    இன்று (20-02-2020) அதிகாலை சுமார்  3.30 மணியளவில் சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்றுகொண்டிருந்த கேரள அரசுப்பேருந்தும் – கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 20 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிற செய்தியறிந்து நெஞ்சம் பதறியது.

    இதேபோல், சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே பெங்களூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நரிப்பள்ளம் அருகே, தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 6 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

    ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள், சாலைப் போக்குவரத்தில் நாம் மேலும் கவனம் செலுத்தவேண்டும் என்கிற எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இக்கோர விபத்துக்களில் மரணமடைந்துள்ளவர்களின்  குடும்பத்தினருக்கு  என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம் பெறவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.