• டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில்வெற்றிபெற்றஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் -முதல்வருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர்எம்.பி. வாழ்த்து

    டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியினை பெற்றிருக்கின்றது.  அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

    மக்களின்  அடிப்படைத் தேவைகளையும், அன்றாட பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்ற ஆட்சியாளர்களை மக்கள் கைவிடுவதில்லை என்பதை  டெல்லி வாக்காளர்கள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக தனக்கிருக்கும் அதிகார எல்லைக்குட்பட்டு, சிறப்பான ஒரு ஆட்சியினை திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நடத்தியிருக்கிறார் என்பது, இத்தேர்தல் வெற்றியின் மூலம் தெரிகின்றது.

    இத்தகு சிறப்பான வெற்றியினை பெற்றுள்ள திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும், வெற்றி பெற்றுள்ள ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்களையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.