• “அனைத்துதமிழர்கள் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்” - IJK தலைவர் ரவி பச்சமுத்து பொங்கல்திருநாள் வாழ்த்து

    தை முதல் நாளில் விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை அரிசியாக்கி - அதில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையல் வைப்பார்கள். மேலும் மஞ்சள் – வாழை – கரும்பு ஆகிய பொருட்களையும் வைத்து வணங்குவார்கள்.

    மறுநாள் விவசாயத்திற்கு உறுதுணையாக நின்ற காளை மாடுகளுக்கு வண்ணம் பூசியும், அழகுபடுத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். காணும் பொங்கல் அன்று, ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடத்தி, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கோலாகலமாக இத்திருவிழாவைக் கொண்டாடுவார்கள்.

    இம்மூன்று திருவிழாக்களும் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படும்  இத்தருணத்தில், அனைத்து தமிழர்கள் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் எனக்கூறி, எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.