• “கதிரவனுக்கும் – கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும்திருவிழாவே பொங்கல் திருவிழா” - டாக்டர் பாரிவேந்தர் M.P., பொங்கல் திருநாள் வாழ்த்து

    தமிழர் திருநாளான தைப்பொங்கல், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகும். உயிரினங்களின் இயக்கத்திற்கும் – வாழ்விற்கும் முக்கிய காரணியாக விளங்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், உழவர்கள் தங்களோடு இணைந்து விவசாயத்தை மேற்கொள்ள பாடுபடும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும், இத்திருநாளின் நிறைவாக மூத்தவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் வாழ்த்து பெறும் உன்னதமான மரபு சார்ந்த விழாவாகவும் இப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த இத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும், எனது இதயமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.